கடலூர், மஞ்சக்குப்பத்தில் இந்து முன்னணியினர் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!!
கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் இந்து முன்னணி சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உயர்நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு நிறைவேற்ற கோரி இந்து முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு இந்து முன்னணியின் மாநில செயலாளர். ஆவசனில் குமார் ஜி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் இரா வேல்முருகன் சி, எம் ஆர் ராஜன், கார்த்திக், சரவணன், வெங்கடேசன், பெருமாள், ரவிச்சந்திரன் மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் திரளாக 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் அவர்களுக்கு அனுமதி இல்லை என்று கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர் அவர்கள்இந்து முன்னணியினரை குண்டுகட்டாக அவர்களின் வாகனத்தில் ஏற்றி அருகில் இருந்த மண்டபத்தில் அடைத்தனர் இதில் 80க்கும் மேற்பட்டோர் மண்டபத்தில் தங்க வைத்தனர். இரவு பத்தே கால் மணிக்கு அவர்களை மண்டபத்தில் இருந்து விடுவித்தனர். அவர்கள் அங்கிருந்து உட்லவாடி சாலையிலிருந்து மஞ்சக்குப்பம் தபால் நிலையம் வரை ஊர்வலம்மாக முருகா! முருகா!! என கோஷமிட்டு வந்தடைந்து; கலைந்து சென்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக