தேனி - போதிய மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி!!
தேனி மாவட்டத்தில் போதிய மழை பெய்ததால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையால் வைகை அணை சோத்துப்பாறை அணை போன்ற நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது மேலும் இந்த மழை வெப்பத்தை குறைத்து விவசாயத்திற்கு தேவையான நீரை அளிப்பதால் பயிர்கள் செழிக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் மகிழ்ச்சி. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியிலிருந்து வத்தலகுண்டு புறவழி சாலையில் சேடப்பட்டி சிலுக்குவார் பட்டி T.அணைக்கரைப்பட்டி, பெருமாள் பட்டி ,மூனாண்டிப்பட்டி , தர்மத்துப்பட்டி, நடுக்கோட்டை, காமாட்சிபுரம், புள்ளிமான் கோப்பை, விராலிப்பட்டி போன்ற கிராமங்களில் நெல், சோளம் பயிரிடப்பட்டுள்ளது. மேலும் கரும்பு ,வாழை தென்னை, அவரைக்காய் ,காலிஃப்ளவர் ,வெண்டைக்காய் போன்றவைகள் பயிரிடப்பட்டு விவசாயம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உரமிடுதல் நடவு நடுதல் களை எடுத்தல் போன்ற பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்திகளில் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக