மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் நிகழ்வு!!
தேனியில் 50 ஜோடி மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்யப்பட்டது. தமிழ்நாடு அறநிலையத்துறை சார்பில் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் திண்டுக்கல் மாவட்ட அறநிலைத்துறை சார்பில் தேனி மாவட்டத்தில் உள்ள 70 வயதான 50 மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் நிகழ்வு நடத்தப்பட்டது. தேனி மாவட்டம், வீரபாண்டி அருள்மிகுஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர். ரஞ்சித் சிங் IAS மற்றும் தங்க தமிழ் செல்வன் எம். பி.அவர்களும் பங்கேற்று மூத்த தம்பதியருக்கு புத்தாடை மற்றும் மலர்கள் பழங்கள் தாம்பூலம் மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் இணையாருக்கு மலர் மாலை அணிவித்து மகிழ்ந்தனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக