நிலத்தை சீரமைத்த போது கிடைத்த தங்க புதையல்!!
திருப்பத்தூரை அடுத்த சுந்தரம் பள்ளியில் விவசாய நிலத்தை சீரமைப்பு பணிக்காக தோண்டிய போது பூமியிலிருந்து கிடைத்த புதையலை அரசுக்கு தெரிவிக்காமல் மறைத்த நபரிடம் இருந்து அதனை வட்டாட்சியர் கைப்பற்றினார்.ஆதவன் என்பவருக்கு கிடைத்த புதையல் கிடைத்ததாக தகவல் பரவிய நிலையில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.VAO நடத்திய விசாரணையில் அது உண்மை என தெரியவந்தது.இதனையடுத்துஆதவன் வசமிருந்த 86 தங்க காசுகளகளை வட்டாட்சியர் பறிமுதல் செய்தார்.மேலும் தங்க காசுகள் இருந்ததா என வருவாய்த்துறையினர் சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக