திருவண்ணாமலை திமுக இளைஞர் அணி மண்டல கூட்டத்திற்கு எஸ்.ஜி.சி பெருமாள் தலைமையில் நெமிலி மத்திய ஒன்றிய திமுகவினர் பயணம்!!
திருவண்ணாமலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வடக்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக கழக இளைஞரணி செயலாளருமான. உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த இளைஞர் அணி மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் வடக்கு மண்டலத்தில் உள்ள 29 கழக மாவட்டங்கள், 91 சட்டமன்ற தொகுதிகளில் சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் இளைஞர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி அவர்களின் அறிவுறுத்தலின்படி, இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட,
நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக செயலாளர் SGC.பெருமாள் தலைமையில், ஒன்றிய அவைத்தலைவர் பா.செ.நரசிம்மன், ஒன்றிய துணை செயலாளர் A.சீனிவாசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் J.மணிகண்ட கருணாநிதி, இளைஞரணி துணை அமைப்பாளர்கள். பெருமாள், யுவராஜ், சந்துரு, சுவேத் உள்ளிட்ட 150- க்கும் மேற்பட்ட ஒன்றிய, கிளை கழகத்தினர் உடன் சென்றனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி



கருத்துகள்
கருத்துரையிடுக