மதுபோதையில் சம்மட்டியால் அடித்து காதல் மனைவி படுகொலை கணவர் கைது!!

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள வி.எஸ்.கோட்டை- சில்வார்பட்டியை சேர்ந்தவர் பிரபு (35). இவர் டிராக்டர் ஓட்டுநராகவும் மெக்கானிக் வேலையும் பார்த்து வந்துள்ளார்.இவரும். ஈஸ்வரி (32) என்பவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஹரிஸ்குமார், கவின் ஆகிய 2 மகன்களும், துளசிமணி என்ற மகளும் உள்ளனர்.

பிரபு தனது மாமனார் ஊரான பிடாரிகோட்டம் பகுதியில் வசித்து வந்துள்ளார். மதுபழக்கத்திற்கு அடிமையானதால் அடிக்கடி கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை பின்னிரவும் அதேபோல் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முற்றியது. இதில் ஆத்திரமடைந்த பிரபு வீட்டில் இருந்த சம்மட்டியால் தனது மனைவியை தாக்கினார். இதில் ஈஸ்வரி மயங்கி விழுந்தார். அவர்களது சத்தம் கேட்டு அருகில் இருந்து மாமனார் தங்கையா ஓடிவந்தார்.பின்னர் அவசர ஊர்தியில்  வரவழைத்து சிலுவத்தூர் ஆரம்ப  சுகாதார நிலையத்திற்கு

கொண்டு வந்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவரது உடல் கூற் ஆய்விற்காக  திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்தது மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (ஊரகம்) சங்கர் தலைமையில் சாணார்பட்டி காவல் ஆய்வாளர் பொன்.குணசேகர் (பொ), உதவி ஆய்வாளர் சுப்பிரமணி போலீஸார் மற்றும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மனைவியை அடித்துக் கொன்ற கணவர் பிரபுவை வியாழன்கிழமை  கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!