கம்பளியம்பட்டி வரசித்தி வராஹி அம்மன் கோயிலில் பௌர்ணமி சிறப்பு பூஜை!!
சாணார்பட்டி அருகேயுள்ள கம்பளியம்பட்டி வரசித்தி வராஹி அம்மன் கோயிலில் பௌர்ணமி யையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள கம்பிளியம் பட்டி வராஹிபுரத்தில் அமைந்துள்ள வரசித்தி வராஹி அம்மன் கோயிலில் கார்த்திகை மாத பௌர்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் வராஹி அறக்கட்டளையின் தலைவர் சஞ்சீவிகுமார் சாமிகள் தலைமையில் நடைபெற்றது.
இதில் திண்டுக்கல், கோபால்பட்டி, சாணார்பட்டி, நத்தம், செந்துறை, சிறுகுடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட வரசித்தி வராஹி அம்மன் பக்தர்களும், கம்பிளியம்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் வராஹி அறக்கட்டளை நிர்வாகிகளும் செய்திருந்தனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர். நத்தம் மதுரை வீரன்

கருத்துகள்
கருத்துரையிடுக