தோரண மலைக்கு புதிய பேருந்து சேவை!!
தென்காசி மாவட்டம்,தோரணமலைக்கு வரும் புதிய பேருந்து காலை 6 மணிக்கு செங்கோட்டையில் கிளம்பி , 6.30 மணிக்கு தென்காசி புதிய பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் .மத்தளம்பாறை , செக் போஸ்ட் வழியாக தோரணமலை அடிவாரத்தை 7 மணிக்கு வந்தடைந்தது .
பின்பு கடையம் , கட்டேரிபட்டி , புங்கம்பட்டி , மயிலப்புரம் , ஆவுடையானூர் , கொண்டலூர் , திப்பணம்பட்டி வழியாக பாவூர்சத்திரம் சென்று , மீண்டும் தோரணமலை அடிவாரம் வந்தது !
அடுத்து , கடையம் , கட்டேரிபட்டி , மயிலப்புரம் , வெங்கடாம்பட்டி , லட்சுமியூர் , ஐந்தாம் கட்டளை , ராம் நகர் , காளத்தி மடம் வழியாக ஆலங்குளம் சென்று வந்தது !
இன்னும் ஓரிரு நாட்களில் கிளம்பும் நேரம் , வந்து சேரும் நேரம் ஓரளவு தெரிய வரும் .
இரு முறை ரயில்வே கேட்டில் நிற்க வேண்டி உள்ளது . இந்த கால விரயத்தை தவிர்க்க ஆலோசிக்கப்படுகிறது .விரைவில் அவை சமூக வலைதளங்கள் மூலம் பக்தர்களுக்கு அறிவிக்கப்படும் .
இன்று புதிய பேருந்து வரும் விசயத்தை மேற்கண்ட கிராமங்களுக்கு ஒலிபெருக்கி மூலம் தெரியப்படுத்தப்பட்டது. முக்கியமாக வயதான, ஆதரவில்லா பெரியோர்கள் வர வைத்து காலை , மதியம் உணவளித்து , தேனீரும் தந்து உபசரிக்கப்படுவர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக