தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம்!!


வேலூர் மாவட்டம் தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் வேலூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் இன்று வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது.  மாவட்ட   தலைவர் முனைவர் .செ.நா.ஜனார்த்தனன், தலை மை தாங்கினார். அப்போது அவர்  கூறியதாவது ஜனவரி மாதம் 24ல் கரூரில் நடைபெறும் 2வது மாநில மாநாட்டில் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பது என்றும் மாநில அளவில் பல்வேற ஓய்வு பெற்ற இயக்கங்களுடன் இணைந்து செயலாற்றுவது என்ற மாநில முடிவினை ஏற்று செயல்படுத்து வோம் என்றார். முன்னதாக மாவட்ட செயலாளர் ஜி.ஆறுமுகம்  வரவேற்று பேசினார்.  

மாவட்ட பொருளாளர்  அ.சிவக்குமார், முன்னிலை வகித்து பேசினார். மாவட்ட துணைத்தலைவர்கள் ஜி.விநாயகம், ஜி.ராஜேந்திரன்,  மாவட்ட இணைச்செயலாளர்கள் இல.சீனிவாசன், எஸ்.சச்சுகுமாரி,  ஆகியோர் மாவட்ட செயல்பாடுகள் குறித்து பேசினர். ஆசிரியர் இல்லத்தின் பொதுச் செயலா ளராக மீண்டும் தேர்தெடுக்கப்பட்ட டி.செல்வமுத்து மற்றும் செயற்குழு உறுப்பின்ர் ஜி.விநாயகம் ஆகியோருக்கு சால்வை அணிவித்து பாராட்டப்பட்டனர்.  பின்னர் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது .

1.தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை போல ஓய்வு பெற்ற அனைவருக்கும் 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியர்கைள் அனைவருக்கும் 10 சதவிகிதம் ஓய்வூ தியம் உயர்த்தி வழங்கிட கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2.ஓய்வூதிய தொகுப்பு (கமுடேசன்) தொகையினை  பிடித்தம் செய்யும் காலத்தை 15 ஆண்டிலிருந்து 10 ஆண்டு களாக குறைத்திடுக

3.சி.பி.எஸ். திட்டத்தினை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

4.80 வயது துவங்கும் போதே கூடுதல் ஓய்வூதியர் 20 சதவிகிதம் வழங்க வேண்டும்

5.மத்திய அரசு வழங்குவது போல் ரூ.1000 மருத்துவபடி வழங்க வேண்டும்

6.மூத்த குடிமக்களுக்கு இரத்து செய்யப்பட்ட இரயில் கட்டணச் சலுகை மீண்டும் வழங்க வேண்டும்.

7.அரசு பேருந்துகளில் ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி செய்து தர வேண்டும்முடிவில் பொருளாளர் அ.சிவகுமார் நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்யராஜ் 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!