புதுக்கோட்டையில் இருந்து ராயவரத்திற்கு புதிய பேருந்து சேவை தொடங்கி வைத்த அமைச்சர். ரகுபதி!!
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டையில் இருந்து பெருங்குடி வழியாக ராயவரம் செல்லும் அரசு டவுன் பஸ் தடம் எண் 22 க்கு புதிதாக ஒரு பஸ் இயக்கப்பட்டது. இந்த புதிய பஸ் இயக்கத்தை அமைச்சர் ரகுபதி நேற்று தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் முகமது நாசர், உதவி மேலாளர் தில்லைராஜன், முன்னாள் அரிமளம் ஒன்றிய சேர்மன். பொன்.ராமலிங்கம் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக