வி.சி.மோட்டூரில் கலைஞர் கருணாநிதி சிலைக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் ஆர். காந்தி!!
ராணிப்பேட்டை மாவட்டம், வி.சி.மோட்டூர் பைபாஸ் சாலையில் முன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் சிலையை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சரும், ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளருமான ஆர்.காந்தி அவர்கள் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.
இதில் கழக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் ஆர்.வினோத்காந்தி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினரும், இளைஞர் அணி அமைப்பாளருமான J.L.ஈஸ்வரப்பன், மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமுர்த்தி, துணை செயலாளர்.
துரைமஸ்தான், நெமிலி கிழக்கு ஒன்றிய கழக செயலாளரும், நெமிலி ஒன்றியக் குழு பெருந்தலைவருமான பெ.வடிவேலு மற்றும் ஒன்றிய, நகர, பேருர் கழக செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி





கருத்துகள்
கருத்துரையிடுக