நத்தத்தில் விவசாயிகள் தின விழிப்புணர்வு பேரணி!!
நத்தம்- கோவில்பட்டி கிராமத்தில் உள்ள துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தேசிய விவசாயகள் தினம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தேசிய விவசாயிகள் தினத்தையொட்டி, திண்டுக்கல் மாவட்டம்,நத்தம்- கோவில்பட்டி கிராமத்தில் உள்ள துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள், கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் இப்பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர். “இன்றைய மாணவர்கள் நாளைய விவசாயிகள்” என்ற தலைப்பில் நடைபெற்ற இப்பேரணியில் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, விவசாயம் தொடர்பான முழக்கங்களை எழுப்பினர்.
பேரணியில் பங்கேற்ற மாணவர்களிடம் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் உரையாற்றினர். நாளைய விவசாயத்தின் தேவை, வேளாண்மையின் இன்றியமையாமை மற்றும் மாணவர்களின் பங்களிப்பு குறித்து அவர்கள் விளக்கினர்.இதுபோன்ற நிகழ்ச்சிகள் மாணவர்களிடையே விவசாயத்தின் முக்கியத்துவத்தை ஏற்படுத்துவதாக பங்கேற்றோர் தெரிவித்தனர்.
படவிளக்கம்: நத்தத்தில் தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி பங்கேற்ற மாணவர்கள்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்

கருத்துகள்
கருத்துரையிடுக