"மனிதஉரிமைகள்"தினத்தை முன்னிட்டு உறுதிமொழி!!
தேனி மாவட்டம்,"மனித உரிமைகள்" தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.B.சினேஹாப்ரியா ,இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் இணைந்து
"இந்திய அரசியலமைப்பு சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்த தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்று உறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமாற உறுதிமொழிகிறேன்.
எவ்வித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில்,நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன்.
என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும், நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்யமாட்டேன்.மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்.
(அனைவரும் மகிழ்ச்சி பொங்க வாழ்வோம்)
என்று "மனித உரிமைகள் நாள்" உறுதிமொழிஎடுத்துக்கொண்டனர்.மேலும் மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் "மனித உரிமைகள் நாள்" உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.



கருத்துகள்
கருத்துரையிடுக