சண்முகநாதன் பொறியியல் கல்லூரி தாளாளர் டாக்டர். பிச்சப்பா மணிகண்டனுக்கு 'திருப்பணி அரசர்' விருது!!

 புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம், அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரி தாளாளர் டாக்டர் பிச்சப்பா மணிகண்டனுக்கு காரைக்குடியில்  , 'திருப்பணி அரசர்'  விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நகரத்தார் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா காரைக்குடியில்  கே.ஒய்.என்.இணைய வழித் தொலைக்காட்சி சார்பில் டிச.28,2005  அன்று நடைபெற்றது.

 இவ்விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் கே.ஒய்.என். இயக்குநர் அண. சீனிவாசன் வரவேற்புரை ஆற்றினார்.  தஞ்சாவூர் ப்ளாஸம் பப்ளிக் பள்ளி  தாளாளர் அழகு அழகப்பன் செட்டியார் தலைமை வகித்தார்.

சண்முகநாதன் பொறியியல் கல்லூரித் தாளாளர்  டாக்டர் பிச்சப்பா மணிகண்டன் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார்.

சமூகத்தின் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த நகரத்தார் சமூகத்தின் 26 சாதனையாளர்களுக்கு 'கே.ஒய்.என்.- 2025' விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதில் சண்முகநாதன் பொறியியல் கல்லூரி தாளாளர் டாக்டர் பிச்சப்பா மணிகண்டனுக்கு கல்விச் சேவையில் மட்டுமில்லாமல், தனது தாயார் திருமதி பிச்சப்பா வள்ளியம்மை அவர்களின் வழிகாட்டுதலின்படி திருவாரூர் மடப்புரம் ஸ்ரீ தெட்சிணாமூர்த்தி, கோ.வேலங்குடி ஸ்ரீ காமாட்சி அம்பாள் - கண்டீஸ்வரர் ஆலயம், ஸ்ரீ தேசிக நாராயண பெருமாள் கோவில், அரசம்பட்டி ஸ்ரீவித்யா கணபதி , ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில்கள் ஆகியவற்றை செவ்வனே புனரமைத்தும், நிர்மாணித்தும் குடமுழுக்கு விழாவையும் தங்களது சொந்தச் செலவில் நடத்தி, அந்தக் கோவில்களுக்கு ஆகமவிதிப்படி தினசரி பூஜைகள் நடைபெறவும் பெரும் பங்காற்றி வருகிறார்.

 தன்னுடைய கடுமையான சொந்தப் பணிகளுக்கு மத்தியிலும், கோவில்களை பலரும் போற்றும் வகையில் நிர்வகித்து, பராமரித்து ஆன்மீகச் சேவையில் தொடர்ந்து  ஈடுபட்டு வரும் டாக்டர் பிச்சப்பா மணிகண்டனின் இந்த ஆலயத் திருப்பணிச் சேவைகளைப் பாராட்டி காரைக்குடி கே.ஒய். என். நிறுவனம் சார்பில் 'திருப்பணி அரசர்' விருது வழங்கப்பட்டுள்ளது.

கல்விச் சேவை மட்டுமில்லாமல் ஆன்மீகப் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள  சண்முகநாதன் பொறியியல் கல்லூரி தாளாளர், டாக்டர் பிச்சப்பா மணிகண்டனுக்கு வழங்கப்பட்டுள்ள  'திருப்பணி அரசர்' விருது , அவருடைய ஆன்மீகப் பணி சிற்க்க மேலும் ஒரு மணிமகுடமாகும் என விழாவில் பலரும் பாராட்டிப் பேசினர்.

'திருப்பணி அரசர்' விருது பெற்றுள்ள டாக்டர் பிச்சப்பா மணிக்கு  சண்முகநாதன் பொறியியல் கல்லூரி தலைவர் பிச்சப்பா வள்ளியம்மை,இயக்கு நர்கள் ம.சண்முக நாதன்,ம.பிச்சப்பா,செயலாளர் மு.விஸ்வநாதன், முதல்வர் டாக்டர் குழ.முத்துராமு, அனைத்து துறைத்தலைவர்கள்,

பேராசிரியர்கள், அனைத்துப் பணியாளர்கள் மற்றும் மாணவ,மாணவியர் உள்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!