குற்றாலத்தில் தடையை மீறி குளிக்கும் போராட்டம் பிஜேபி அறிவிப்பு!!
தென்காசி மாவட்டம், குற்றால அருவியில் தண்ணீர் இவ்வளவு குறைவாக விழும் பொழுது குளிக்க தடை விதித்தால் உள்ளூர் பொதுமக்களும், உல்லாச பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் எப்படி குற்றாலம் வருவார்கள்.
இதை நம்பி குற்றாலத்தை சுற்றியுள்ள குக்கிராமங்களில் சுமார் 50,000 குடும்பம் இந்த அருவியை நம்பியே வாழ்வாதாரம் உள்ளது இப்படி அடிக்கடி தடைவிதித்தால் இந்த 50,000 குடும்பம் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறிவியாகும் ஆகையால் மாவட்ட நிர்வாகம் இதற்கு உடனடியாக தீர்வு காணவில்லை எனில் குற்றாலம் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநில தலைவர். நைனார் நாகேந்திரன் ஆணைக்கிணங்க மாவட்ட தலைவர். ஆனந்தன் ஐயா சாமி முன்னணியில் தடையை மீறி குளிக்கும் போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக குளிக்க அனுமதிக்க வேண்டும் தயவுசெய்து ஐம்பதாயிரம் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு உடனடியாக அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதிக்க வேண்டும் இல்லையெனில் கண்டிப்பாக தடையை மீறி குளிக்கும் போராட்டம் அறிவிக்கப்படும்; மாவட்ட நிர்வாகமே! தூண்டாதே! தூண்டாதே!! போராட்டத்தை தூண்டதே!!! அடிக்காதே! அடிக்காதே!! ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே இது மாவட்ட நிர்வாகத்திற்கு ஒரு முன் அறிவிப்பு என பிஜேபியினர் தெரிவித்தனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக