நத்தம் அருகே அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு!!

திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அருகே சிறுகுடியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1994 - 95 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி 30 ஆண்டுகள் கழித்து இவர்கள் ஒன்று கூடியது குறித்து மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து அந்த பள்ளிப் பருவத்தில் நடந்த தங்களின்  மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னதாக மகிழ்ச்சியை கேக் வெட்டி வெளிப்படுத்தி தங்கள் ஆசிரியர்களுக்கு வழங்கியும் ஒவ்வொருவருக்கும் பெற்று இனிமையை சுவைத்தனர். பின்னர் பள்ளியின் வளாகத்தில் உள்ள வகுப்பறைகள் போன்றவற்றை பார்வையிட்டனர். தொடர்ந்து வந்திருந்து வாழ்த்துக்கள் வழங்கிய முன்னாள் ஆசிரியர்களுடன் சேர்ந்து அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து இந்நாளை நினைவு கூறும் விதமாக ஒவ்வொருவருக்கும் மரக்கன்றுகள் வழங்கினர். விளையாட்டுப் போட்டி நடத்தி நினைவுப் பரிசுகள் வழங்கினர். இதில் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் பலரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!