திருவண்ணாமலை தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள்!!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில் 300 கிலோ எடை கொண்ட தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள். உலகப் பிரசித்தி பெற்ற அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை
திருக்கார்த்திகை தீபத்திருநாள் நாளை அதிகாலை அண்ணாமலையார் கருவறை முன்பு அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் அன்று மாலை கோயில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட தீப மலையில் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது இந்த மகா தீபத்திற்காக பயன்படுத்தப்படும் ஐந்து
முக்கால் அடியில் 300 கிலோ எடையுள்ள கொப்பரை ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்து இன்று காலை 5 மணி அளவில் கிளி கோபுரம் அருகே நந்தியம் பகவான் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது மேலும் கோவில் பணியாளர்கள் தோலின் மேல் தூக்கி தீப கொப்பரையை 2668 அடி உயரம் கொண்ட தீபமலைக்கு சுமந்து செல்கின்றனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி



கருத்துகள்
கருத்துரையிடுக