தேனி - குமுளி புதிய பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு!!
தேனி மாவட்டம் குமுளியில் அரசு போக்குவரத்து துறை சார்பில் நவீன பேருந்து நிலையம் கட்டுவதற்கு ரூபாய் 5.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து 8 வணிக வளாக கட்டிடங்கள், 11 பயணியர் தங்கும் அறைகள் ,பேருந்து நிறுத்தம், சுகாதார வளாகம் ,குடிநீர் வசதி ,வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கிய புதிய பேருந்து நிலையத்தை கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக கட்டுமான பணிகள் நடைபெற்று தற்போது பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் பயணிகள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக