ஆண்டிபட்டி - அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற மார்கழி மாத பிரதோஷ வழிபாடு!!



தேனி மாவட்டத்தில் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு மிக விமர்சையாக நடைபெற்றது . மார்கழி மாத பிரதோஷம் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. சிவனை வழிபட்டால் சிறப்பு. சிவன் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்த தினமே பிரதோஷம்.பிரதோஷ தரிசனம் காண்பதால் செல்வம் சேரும் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும் தடைகள் விலகி வெற்றி கிடைக்கும் சிவ வழிபாடு செய்ய முற்பிறவிகளில் செய்த பாவங்களும் நீங்கும் . நந்தியும் பெருமானுக்கும் சிவனுக்கும் திருமஞ்சனம் சந்தனம் மஞ்சள் பஞ்சாமிர்தம் இளநீர் தேன் பால் விபூதி தயிர் பன்னீர் போன்ற பலவித வாசனை திரவியங்களுடனும் சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றது.பலவித வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிவாச்சாரியாரால் வேதங்கள் முழங்க மகாதீப ஆராதனைகளும் காண்பிக்கப்பட்டது. மேலும் ஆண்டிபட்டி பிரதோஷ குழுவினர் சார்பில் மணிகண்டன் தலைமையில் சிறப்பாக அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் சிறப்பாக வழங்கப்பட்டது. ஆண்டிபட்டி சுற்று வட்டார பகுதி பக்தர்கள் பிரதோஷ வழிபாட்டில் திரளாக கலந்து கொண்டனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!