திண்டுக்கல் - மழை நீரால் மிதக்கும் தெருக்கள்!!
திண்டுக்கல் மாவட்டம் மீனாட்சி நாயக்கன்பட்டி கிராமத்தில் மழை நீரால் மிதக்கும் தெருக்கள் சேரும் சகதியுமாக குப்பைகள் சுகாதாரக் கேடு விளைவிக்கும் வகையில் உள்ளன. இதனால் பல தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி மக்கள் பெரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மேலும் பள்ளி செல்லும் குழந்தைகள் வழுக்கி விழுவதாகவும் வாகனங்கள் செல்ல முடியாமல் தவிப்பதாகவும் இந்நிலையை சரி செய்து தரும்படி அப்பகுதி மக்கள் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி


கருத்துகள்
கருத்துரையிடுக