திருவருள் பேரவை சார்பாக நடைபெற்ற கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்தரங்கம் விழா!!
புதுக்கோட்டை மாவட்டம், அனைத்து சமயக்கூட்டமைப்பான திருவருள் பேரவை கடந்த 40 வருடங்களாக தொடர்ந்து பொங்கல், ரம்ஜான் மற்றும் கிருஸ்துமஸ் பண்டிகை நாட்களில் சமய நல்லிணக்க, சமூக ஒற்றுமை மேம்பாட்டிற்காக வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டுவருகிறது. இதனை முன்னிட்டு இன்று திருவருள் பேரவை சார்பாக கிறிஸ்துவ நண்பர்களுக்கு வாழ்த்துவதற்காக மார்த்தாண்டபுரம் ஆர்.சி சர்ச்சுக்குப் புறப்பட்டு, ஆர்.சி சர்ச் வளாகத்தில் வாழ்த்து தெரிவித்தார்கள் மற்றும் மச்சுவடி டி .இ .எல் . சி சர்ச்சுக்கு புறப்பட்டு, டி .இ .எல் . சி சர்ச் வளாகத்தில் வாழ்த்து தெரிவித்தார்கள். புதுக்கோட்டை மார்த்தாண்டபுரம் ஆர்.சி சர்ச் தந்தை மறைதிரு. ஏ. சவரிநாயகம் அடிகளார் மற்றும் மச்சுவாடி டி .இ .எல் . சி சர்ச் தந்தை மறைதிரு ஆர் சுரேஷ் அவர்களும் அனைவரையும் வரவேற்றார்கள் . திருவருள் பேரவை தலைவர் டாக்டர். சலீம் அவர்கள் தலைமை ஏற்றார், செயலாளர். சந்திரசேகரன், பொருளாளர். மத்தியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர்கள். முகமது அசரப் அலி பேராசிரியர். விஸ்வநாதன், துணை செயலாளர்கள். முருகையன், ஆரோக்கியசாமி, ரோட்டரி முன்னாள் ஆளுநர். சொக்கலிங்கம், பி.எஸ். கருப்பையா, ராமுக்கன்னு, திலகவதியார் திருவருள் ஆதிமை தலைவர். தயானந்த சந்திரசேகர் சுவாமிகள், .சகாய ராஜ்.இன்னாசி முத்து, .ஆறுமுகம், லதா உத்தமன், ராமசாமி, சௌந்திர ராஜன், .சவரிமுத்து, புதுக்கோட்டை தமிழ் சங்கம் சார்பாக கவி. முருகபாரதி, கண்ணதாசன, புதுகை புதல்வன் மற்றும் ஏ .எம் .சரிபு, சிறு தொழில் சங்க செயலாளர். முரளி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திருவருள் பேரவை துணை செயலாளர். சையது இப்ராஹிம் பாபு நன்றி கூறினார்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக