குடியாத்தத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், விதவைகளுக்கு நல உதவிகள் வழங்கல்!!
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தைச் சமூக சேவகர் கே.வி.ராஜேந்திரன் ஏற்பாட்டில் 94-ஆவது. மாதமாக மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், விதவைகளுக்கு நல உதவிகள் என
100 நபர்களுக்கு அரிசி , பருப்பு, போர்வைகள் போன்ற நல உதவிகள் 28.12.2025-நேற்று வழங்கப்பட்டன.
நடுப்பேட்டை ராஜாஜி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கே.வி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் நகர்மன்ற உறுப்பினர். வி. இ.கருணா முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குடியாத்தம் வட்டாட்சியர் கே .பழனி கலந்து கொண்டு நல உதவிகளையும் பொருட்களையும் வழங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா , 36-ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர். ம.மனோஜ் ,
முன்னாள் நகர்மன்ற உறுப்பினர். ஜி.நவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதில், சுமார் நூறு நபர்களுக்கு அரிசி, பருப்பு, சேமியா, ரவை, போர்வைகள் போன்ற பொருள்கள் வழங்கப்பட்டன.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்யராஜ்.

கருத்துகள்
கருத்துரையிடுக