திட்டக்குடி அருகே லயன்ஸ் சங்கம் மற்றும் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்!!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் லயன்ஸ் சங்கம் மற்றும் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு லயன் சங்க தலைவர் வசந்த ராஜ் தலைமை தாங்கினார். சாசன தலைவர் ஞானபிரகாசம் உலக திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் ஞானமூர்த்தி, மாவட்டத் தலைவர் அருள்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட தலைவர் டீ கிருஷ்ணமூர்த்தி, வட்டாரத் தலைவர் ஆனந்தன், சங்க இயக்குனர் மேழிச்செல்வன், மாவட்ட தலைவர் சக்திவேல், முன்னாள் பொருளாளர் பாண்டியன், முன்னாள் தலைவர் செல்வராஜ், லயன் டாடாஜி கௌதம், லயன் ஜெய்சங்கர், லயன் பாஸ்கரன் ,லயன் வரலட்சுமி ,செயலாளர் வினோத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் கண் பரிசோதனை, கிட்டப்பார்வை, தூரப்பார்வை, லென்ஸ் பொருத்துதல் போன்ற கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையின் டாக்டர்கள் கொண்ட குழுவினர் கண் பரிசோதனை செய்தனர். இதில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக