கம்பிளியம்பட்டிவரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் நடைபெற்ற மார்கழி மாத அம்மாவாசை யாக பூஜை!!

திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அருகேயுள்ள கம்பிளியம்பட்டி வாராஹிபுரத்தில் வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் மார்கழி மாத அம்மாவாசை யாக பூஜை வெள்ளிக்கிழமை  காலை துவங்கி சிறப்பு அபிஷேகம் ஆராதனையோடு யாக பூஜையும் நடைபெற்றது.

இந்த பூஜையில் அலங்கரிக்கப்பட்ட கலசத்தில் வரசித்தி வாராஹி அம்மனை பூஜித்து சிறப்பு பூக்களால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.அக்கினியில் அஸ்வாரூடா வாராஹி ரூபமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அம்மனின் அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டது அதற்கு பின்னால் அனைத்து பக்தர்களுக்கும் வாராஹி அறக்கட்டளை சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவினை திண்டுக்கல் மாவட்ட வரசித்தி வாராஹி அம்மன் பக்தர்களும் திண்டுக்கல் வாராஹி அறக்கட்டளையின் தலைவர் சஞ்சீவி சாமிகளும் கம்பிளியம்பட்டி கிராம பொதுமக்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!