வத்திபட்டியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் !!
திண்டுக்கல் தெற்கு மாவட்டம், நத்தம் தெற்கு ஒன்றிய தமிழக வெற்றி கழகம் சார்பில் வத்திப்பட்டியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டோல்கேட் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும் ,சாலை வசதிகள் ,குடிநீர் வசதிகள், சாக்கடை வசதிகள், ரெட்டியபட்டி, சாத்தாம்பாடி ,பரளி ,உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் குடிநீர் வசதி செய்து தருமாறும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு தெற்கு மாவட்ட கழக செயலாளர் .S.M. நிர்மல் குமார் தலைமை தாங்கினார். முன்னிலை நத்தம் தெற்கு ஒன்றிய செயலாளர் .P.ஜோதிராம், இணைச் செயலாளர். தங்கசாமி, ஒன்றிய பொருளாளர் குட்டீஸ், துணைச் செயலாளர். ராஜேஷ், செயற்குழு உறுப்பினர். ரஞ்சித், நத்தம் நகர செயலாளர் யுவராஜ் உள்ளிட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.



கருத்துகள்
கருத்துரையிடுக