குற்றாலம் ஐந்தருவி செல்லும் வழியில் கால்நடைகளை தாக்கும் தெரு நாய்கள்!!

தென்காசி மாவட்டம், குற்றாலம் ஐந்தருவி செல்லும் வழியில் உள்ள வெண்ணைமடை என்னும் கிராமத்தைச் சுற்றிலும் தெரு நாய்களின் தொந்தரவு மேச்சலுக்கு செல்லும் ஆடுகள் மாடுகளை கடிப்பதால் கால்நடை வளர்த்து வருபவர்கள் தங்களுடைய வாழ்வாதாரமாக கருதப்படும் கால்நடைகளை இழந்து பொருளாதார ரீதியாகவும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் இதுகுறித்து அந்தப் பகுதியில் கால்நடை வளர்த்து வரும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் துறை சார்ந்த அதிகாரிகள் இந்தப் பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா என்று எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இந்தப் பகுதியில் வசித்து வரும் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமே கால்நடைகள் தான். கவனத்தில் கொள்ளுமா? தென்காசி மாவட்ட நிர்வாகமும் துறை சார்ந்த அதிகாரிகளும்

தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!