திருவப்பூர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற உடல் உறுப்புகள் தான முன்பதிவு முகாம்!!
புதுக்கோட்டை மாவட்டம்,இரண்டு நிமிடங்களில் உடல் உறுப்பு தானம் முன்பதிவு செய்து சான்றிதழ் பெறலாம் என்ற தலைப்பில் திருவப்பூர் நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் சமூக ஆர்வலர் KS.ராம்ஸ்லீ ஏற்பாட்டில் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி மாமன்ற உறுப்பினர்கள் கனகம்மன்பாபு, நிஜாம், மூர்த்தி, ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் பெரியார் நகர் சிவா NK. வினோத் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர். AR.முகமது அப்துல்லா செயலாளர் R.சங்கர் ரோட்டரி மாவட்ட 3000தின் உடல் உறுப்பு தானம் மாவட்டச் செயலாளர். கண.மோகன்ராஜா கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி உடலுறுப்புதான ஒருங்கிணைப்பாளர். சண்முகப்பிரியா கலந்துகொண்டு உடல் உறுப்பு தானத்தை பதிவு செய்து சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்கள். இந்த நிகழ்விற்கு உறுதுணையாக நல்லாசிரியர். க. முத்துராமலிங்கம் உடற்கல்வி ஆசிரியர் உறுதுணையாக இருந்தார். சமூக சேவகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.




கருத்துகள்
கருத்துரையிடுக