கடற்கரையோரம் ஒதுங்கிய மர்ம பொருள். வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை!!
வேளாங்கண்ணியை அடுத்த ராமர் மடம் கடற்கரையில் ஒதுங்கிய ராக்கெட் போன்ற மர்ம பொருள் காவல் துறை கண்காணிப்பாளர் மிக்ஸ்சன் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடற்கரையோர பகுதியில் பி ஆர் புறம் ஊராட்சி கடற்கரை ஓரத்தில் கடலோரப் பகுதியில் அதி நீளமான மர்ம பொருள் நான்கடியில் கடற்கரை ஓரத்தில் ஒதுங்கி உள்ளது .நாலடியில் இருக்கும் அதன் பெயர் லாஞ்சர் என்று கூறப்படுகிறது. நீர்மூழ்கி கப்பலில் பயன்படுத்தி வேவு பார்க்கும் கருவி என கூறுகின்றனர் .மூன்று மாதத்திற்கு முன்னர் மியான்மர் நாட்டில் படகு ஒன்று ஒதுங்கியுள்ளது.கடலோரப் பகுதியில் மர்மமான பொருட்கள் ஒதுங்குவதால் அச்சம் ஏற்படுகிறது என்று கடலோர பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். .இதனால் இந்த கடலோர பாதுகாப்பு படையை பலப்படுத்தி கடலோர பகுதி மக்களை பாதுகாக்க வேண்டும் என்று கடலோர பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக