நத்தம் ராம்சன்ஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற கல்வி கண்காட்சி!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள காட்டுவேலம்பட்டியில் உள்ள ராம்சன்ஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் ராம்சன்ஸ் எக்ஸ்போ-2025 என்ற தலைப்பில் கல்வி கண்காட்சி பள்ளியின் தாளாளர்  ராமசாமி தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் நிர்வாக அதிகாரி தையல்நாயகி, ஆட்சிமன்ற குழு உறுப்பினர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் என்.பி.ஆர்.நர்சரி கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதல்வர் அன்னலெட்சுமி, ராஜபாளையம் சி.சி. அகாடமி சீனியர் கெசண்டரி பள்ளி தாளாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு கல்விக் கண்காட்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர். இதில் 8-ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டு கல்விக் கண்காட்சியில் தமிழ், ஆங்கிலம் சார்ந்த நிகழ்வுகள் குறித்தும், கணிதம் மற்றும் சமூக அறிவியல் கோட்பாடுகளை வடிவமைத்து செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். தொடர்ந்து மாணவர்கள் உருவாக்கிய ரோபோ கண்காட்சிக்கு வந்த பெற்றோர்களை கை கொடுத்து வரவேற்றது. இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

படவிளக்கம் : ராம்சன்ஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் நடந்த கல்வி கண்காட்சியைஎன்.பி.ஆர்.நர்சரி கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதல்வர். அன்னலெட்சுமி, ராஜபாளையம் சி.சி. அகாடமி சீனியர் கெசண்டரி பள்ளி தாளாளர். கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!