புதுக்கோட்டை அருகே நமணசமுத்திரம் ரயில்வே கேட்டில் நடைபெற உள்ள பராமரிப்பு பணி!!
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகாவில் உள்ள நமணசமுத்திரத்தில் உள்ள தெற்கு ரயில்வே கேட்டில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மூடப்பட உள்ளது. ஆகையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் செல்வதற்கு மாற்று பாதை நமணசமுத்திர காவல் துறையினர் மாற்றுவழி செய்துள்ளனர். கேட்டு எண் 385ஐ 6/12/25 அன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை (பகல் நேரம்) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
காவல்துறை அறிவிப்பு -மாற்றுபாதை:
1) வெள்ளாறு பாலம் - பூசத்துறை - திருச்சி to காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
2) மேலத்தேமுத்துப்பட்டி ஆர்ச் - நமனசமுத்திரம் கடை வீதி - திருச்சி to காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வழியாக மாற்றுப்பாதை உள்ளது அதன் வழியாகவும் செல்ல வேண்டும் என்று நமணசமுத்திர காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக