டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் சந்திப்பு!!
டெல்லி:நேற்று (15.12.2025) காலை டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் மாண்புமிகு அஸ்வினி குமார் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும் நெல்லை பாராளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு Adv C.ராபர்ட் புரூஸ் அவர்கள் சந்தித்து;
1.தாம்பரம் செங்கோட்டை செல்லும் வாரம் 3 நாட்கள் இயங்கும் எண் 20683-84 வாரம் 7 நாட்கள் இயக்கவும்
2.பாவூர்சத்திரம் மேட்டூர் லெவல் கிராசிங் 79 ஐ ரத்து செய்து இணைப்பு சாலை மூலம் 80 இல் இணைக்கவும் 81 ஆம் நம்பர் லெவல் கிராசிங்கை ரத்துச் செய்யவும் 81 ஆம் லெவல் கிராசிங்கை சப்வே ஆக வேண்டும் மாற்றவேண்டும்.
3.நெல்லை தென்காசி சேலம் வழியாக பெங்களூருக்கு ஒரு ரயில் இயக்க வேண்டும்.
4.நெல்லை தென்காசி மதுரை பொள்ளாச்சி கோயம்புத்தூர் வழியாக ஈரோட்டிர்க்கு ஒரு ரயில் இயக்க வேண்டும்.
5.டெல்லியில் இருந்து மதுரை வரை இயங்கும்.
(12651-52) சம்பர்க் கிராந்தி விரைவு ரயிலை தென்காசி வழியாக நெல்லை வரை இயக்க வேண்டும்.
6.கீழப்புலியூர் கடையநல்லூர் பைபாஸ் வழித்தடம் அமைக்க வேண்டும்.
7.பாவூர்சத்திரம் கீழ கடையம் அம்பாசமுத்திரம் ரயில் நிலையங்களில் நடைபெற்று வரும் விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக