நெல்லை சென்ற வந்தே பாரத் ரெயில் மீது சரமாரி கற்கள் வீச்சு!!

சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை நோக்கி புறப்பட்டது. அந்த ரெயில் நேற்று மாலை 6 மணியளவில் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ரெயில் நிலையத்திற்கும், தாழநல்லூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே சென்று கொண்டிருந்தது.

அப்போது மர்மநபர்கள் ரெயில் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ரெயிலில் அடுத்தடுத்த பெட்டிகளில் உள்ள 5 கண்ணாடிகள் உடைந்து சேதமானது. இதனால் ரெயில் பயணிகள் அச்சமடைந்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர். சின்னப்பன் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர்.தீபக் ஆகியோர் தலையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரெயில் மீது கற்களை வீசிய மர்மநபர்கள் யார்? என அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!