நத்தம் அருகே இளைஞர் தலையில் கல்லை போட்டு கொலை!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள கோசுகுறிச்சி-கம்பிளியம்பட்டியை சேர்ந்தவர்  பழனிச்சாமி. இவர் மங்களப்பட்டி பகுதியில் ரைஸ்மில் வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் சுக்கிரன் என்ற சூர்யா (28). இவர் தனது தந்தையுடன் ரைஸ்மில்லில் தந்தைக்கு உதவியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கம்பிளியம்பட்டி அருகேயுள்ள கருநாச்சிகுளம் பகுதியில் தலையில் கல்லை போட்டு ரத்தம் தெறித்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அப்பகுதியில் சென்றவர்கள் பார்த்து ஊருக்குள் தகவல் சொல்லியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த நத்தம் காவல் ஆய்வாளர். பொன்.குணசேகரன்,உதவி ஆய்வாளர். அருண்நாராயணன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். அப்போது  சனிக்கிழமை சுமார் 10 மணி அளவில் வீட்டை விட்டுச் சென்ற சூர்யா வீடு திரும்பவில்லை. இந்நிலையில் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தது தெரியவந்ததை தொடர்ந்து போலீஸார் இந்தக் கொலைக்கான காரணம் குறித்தும், கொலையில் ஈடுபட்டவர் ஒருவரா? ஒன்றுக்கும் மேற்பட்டவரா? எப்பொழுது, எதற்காக கொலை செய்தனர்? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அங்கு மோப்ப நாய் லக்கி வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்திலிருந்து சற்று தூரம் ஓடிச் சென்று நின்றது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் ஊரகம் காவல் துணை கண்காணிப்பாளர்.  சங்கர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து கொலையாளிகளை பிடிக்க விசாரணையை துரிதப்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!