ராணிப்பேட்டையில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்! அமைச்சர்.ஆர்.காந்தி பங்கேற்பு!!
ராணிப்பேட்டைமாவட்டம்,இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் முள்ளுவாடி ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.இதில் கைத்தறி மற்றும் துணிநூல்துறைஅமைச்சர்.ஆர்.காந்தி. அவர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்து சான்றிதழ் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர். தனலிங்கம் அவர்கள் ஒன்றிய குழு தலைவர்கள். புவனேஸ்வரி சத்தியநாதன், சி.அசோக் அவர்கள் ஒன்றிய குழு துணை தலைவர். ஜெ.ரமேஷ்ஒன்றிய குழு உறுப்பினர். செந்தாமரை ரஜினி ஊராட்சி மன்ற தலைவர். சூரியா சிவராஜ் ஆகியோர் உடன் இருந்தனர் முடிவில் ஒன்றிய அவைத்தலைவர். பாலி சுப்பிரமணி அவர்கள் நன்றி கூறினார்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக