ராணிப்பேட்டையில் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஒரு நாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை, முத்துக்கடை பஸ் நிலையம் அருகில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கௌரவ தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார் மாவட்டத் தலைவர். தவராஜ் மாவட்ட பொருளாளர். ஹேமாவதி ஆட்டோ ஓட்டுனர் சங்க மாவட்ட செயலாளர். மணி ஆகியோர் பங்கேற்று மத்திய மாநில அரசுகளின் நிதியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 30% நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்.
ஊராட்சியில் பத்தாண்டுகளுக்கு மேல் பணி செய்து வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.
ஊராட்சி அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் பொங்கல் பண்டிகை கருணைத்தொகை ஒரு மாத ஊதியம் வழங்க வேண்டும்.
போன்ற 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர் மேலும் இதில் தொழிற்சங்க தங்க நிர்வாகிகள் ராணிப்பேட்டை நகராட்சி வேல்முருகன் சண்முகம் குப்பன் வாலாஜா நகராட்சி வேலு முரளி மற்றும் பலர் பங்கேற்றனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக