தேனி:மகா சிவராத்திரி ரத யாத்திரை !!
தேனி மாவட்டம்,தேனி மாவட்டத்திற்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈசா யோகா மையம் சார்பில் தேனி வந்த ஆதியோகி ரதத்தை பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று சிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்திலிருந்து ஆதியோகி ரதம் ஆண்டிபட்டி வந்தடைந்தது அனைத்து பொது மக்களும் ஆண்டிபட்டி பிரதோஷ குழுவினர்களும், பக்தர்களும் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்
மகா சிவராத்திரி 2026 பிப்ரவரி 15 இல் கொண்டாடப்படுகிறது இதற்காக கோவை ஈசா யோகா மையம் சார்பில் மாவட்டம் தோறும் ஆதியோகி சிலையுடன் கூடிய வாகனம் மூலம் விழிப்புணர்வு ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது தேனி வேதபுரியில் சித்பவாநந்த ஆசிரம நிர்வாக அறங்காவலர் சுவாமி ஸமாநந்தர் துவக்கி வைத்தார்
ரதம் வீரபாண்டி சின்னமனூர் உத்தமபாளையம் கம்பம் பழனி செட்டிபட்டி தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் வடபுதுப்பட்டி வழியாக பெரியகுளம் சென்றது. ரத யாத்திரையை ஒருங்கிணைப்பாளர் ராமர் ஒருங்கிணைந்தார்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக