டேனி கல்வி குழுமம் சார்பில் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் !!


விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த காரியமங்களத்தில் இயங்கி வரும் டேனி கல்வியியல் கல்லூரி மற்றும் டேனி மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பில் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா

கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு டேனி கல்வி குழும தலைவர் ஜாஸ்பர் தலைமைதாங்கினார்.செயலாளர் ஸ்டெல்லா பாக்கியலட்சுமி முன்னிலை வகித்தார்.பள்ளி முதல்வர் மகாலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக பாஸ்ட்டர் அருள்சாமுவேல்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து கல்வியாளர் டாக்டர் சக்திவேல்  கிறிஸ்து பிறப்பு மற்றும் கிறிஸ்துவின் சமுதாய சிந்தனை பற்றியும் விளக்கம் அளித்து மாணவர்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கிறிஸ்மஸ் பரிசு மற்றும் கேக் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது . தொடர்ந்து கல்வியியல் கல்லூரி மாணவர் சற்குணம் 

கிறிஸ்மஸ் தாத்தா வேடம் அணிந்து  நடனமாடி, பாடல் பாடி, மாணவர்களுக்கு சாக்லேட் வழங்கி மகிழ்வித்தார். தொடர்ந்து 

கிருஸ்மஸ் கேக் வெட்டி கிருஸ்மஸ் கொண்டாடினர்.தொடர்ந்து மாணவர்களுக்கு கேக் வழங்கபட்டது. நிகழ்ச்சியை இரண்டாம் ஆண்டு மாணவி கீதாஞ்சலி தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள்: பரிதி ஓவியா, மரியசெல்வம், சரவணன்,, பள்ளி ஆசிரியர்கள் கயல்விழி,தபிதா , விண்ணரசி. கனிமொழி,  மகாலட்சுமி,  அருள்மொழி,  சூரிய பிரகாஷ்,  அஸ்வினி,  சாமுண்டீஸ்வரி,  கலைச்செல்வி, வெண்ணிலா, ஸ்ரீனிவாசன், சரசு, இறுதியாக பேராசிரியர் ஈஸ்வரி நன்றி கூறினார்.

விழுப்புரம் மாவட்ட சிறப்பு செய்தியாளர் டாக்டர். நடராஜன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!