தவெக தலைவர். விஜய் பங்கேற்கும் கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவரால் பரபரப்பு!!
புதுச்சேரியில் இன்று நடைபெறும் தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரதான நுழைவு வாயிலை கடந்து வெள்ளை சட்டை அணிந்த நபர் உள்ளே சென்றார். கூட்டம் நடைபெறவுள்ள இடத்தில் போலீசார் உள்ளே வரும் அனைவரையும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனையிட்டபோது, அவரது இடுப்புப் பகுதியில் இருந்து சப்தம் கேட்டுள்ளது.
அவரை சோதனையிட்ட போலீஸார், அவரது இடுப்பில் கைத்துப்பாக்கி வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே அவரை தனிமைப்படுத்திய காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக