சித்தஞ்சி கிராமத்தில் ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்!!
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் சித்தஞ்சி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணர் திருக்கோவிலில் இன்று (திங்கட்கிழமை) ரேவதி நட்சத்திரம், தனுசு லக்னத்தில் காலை 10 மணியளவில் சித்தஞ்சியம்மா ஸ்ரீ மோகானந்தா சுவாமிகள் திருக்கரங்களால் மகா கும்பாபிஷேகம் மிக பக்தர்கள் திரள் சூழ,விமர்சையாக நடைபெற்றது. காலை 6.00 மணிக்கு கோவியர் ஸ்ரீகளுடன் கோபூஜையால் நிகழ்வு துவங்கியது. பின்னர் காலை 9.00 மணிக்கு கோபுர குடமுழுக்கு மற்றும் மகா தீபாராதனை செம்மையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
காலை 10.00 மணிக்கு சித்தஞ்தி அம்மா டிரஸ்ட் சார்பில் சிறப்பு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு 7.00 மணிக்கு பகவான் திருவீதியுலா பக்தி எழுச்சியுடன் நடைபெற்றது. இரவு 10.00 மணிக்கு வதியூர் கேசவன் தலைமையிலான ஸ்ரீ ஜெயம் நாடக மன்றம் குழுவினரால் ஆன்மிக நாடக நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்வில் ஊர் நாட்டாமைகள் கேசவன், வீரப்பன், சேட்டு, கண்ணன் உள்ளிட்டோர் மற்றும் கிராம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்

கருத்துகள்
கருத்துரையிடுக