டிட்வா புயல் தாக்குதல் காரணமாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் நிவாரணம்! 945 டன் மெட்ரிக் பொருட்கள்!!

தூத்துக்குடி மாவட்டம்,தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இலங்கை மக்களுக்கு நிவாரணம்; டிட்வா புயல் தாக்குதல் காரணமாக அநேகமானோர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் இருந்து 945 மெட்ரிக் டன் பொருட்கள் அனுப்பப்படுகிறது.

(இலங்கைக்கு செல்லும் நிவாரண பொருட்கள் ஏற்றிச் செல்லும் கப்பல்கள்)

சென்னையில் 645 மெட்ரிக் டன் வேஷ்டி சேலை தார்ப்பாய்கள், சீனி, பருப்பு என மொத்தம் ஏழு கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அனுப்பிவைக்கப்படுகிறது. அந்த நாடே அவசரகால பிரகடனம் செய்து வரும் நிலையில் தமிழக முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டிலிருந்து உடனடியாக உதவி புரிய வேண்டும் என்ற நோக்கத்தில் 945 மெட்ரிக் டன் பொருட்கள் அனுப்பப்படுகிறது. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மூன்று கப்பல்கள் மூலம்; ஒவ்வொரு கப்பலிலும் 100 டன் பொருட்கள் இலங்கைக்கு நிவாரணமாக  அனுப்பி வைக்கப்படுகின்றது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!