இந்தியா முழுவதும் தங்கள் அட்டவணையில் 94 வழித்தடங்களில் நாள் ஒன்றுக்கு 130 விமான சேவைகளை குறைத்த இண்டிகோ நிறுவனம்!!

இந்தியா முழுவதும் தங்கள் அட்டவணையில் 94 வழித்தடங்களில் நாள் ஒன்றுக்கு 130 விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் குறைத்துள்ளது. இதில் பெங்களூருவில் தான் அதிக உள்நாட்டு விமான சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து ஐதராபாத், சென்னை, கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் விமான சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. டெல்லியில் விமான சேவை குறைக்கப்படவில்லை. மும்பையில் வருகை - புறப்பாடு என இரண்டு விமானங்கள் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு நாட்களில் திட்டமிடப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை சற்று மாறுபடக்கூடும் என்பதால் மற்ற நாட்களுக்கான அட்டவணை மாற்றங்களில் சிறிய வேறுபாடுகள் இருக்கலாம் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!