திருமயம்- மறைந்த மு. முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 9-ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு அதிமுக சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி!!
திருமயத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வின் 9 ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு அவரின் திரு உருவப்படத்திற்கு அதிமுக சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அழ.ராமு தலைமை வகித்தார்.திருமயம் வடக்கு ஒன்றிய செயலாளர். பிஎல்ஆர்.பழனிவேலு, எம்ஜிஆர் மன்ற செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் வெங் கிட்டு வரவேற்றார். நிகழ்ச்சியில் கோனாபட்டு தர்மர்,ஊணையூர் சுப்பிரமணியன், மேலூர் சண்முகம், அழகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மணவை ஏகநாதன் நன்றி கூறினார்.
புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்
கருத்துரையிடுக