தேனி - கஞ்சா பறிமுதல் 7 பேர் கைது!!
தேனி மாவட்டம் பெரியகுளம் காலேஜ் விலக்கு பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரிய குளம் DSP நல்லூர் தலைமையில் பெரியகுளம் தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் சந்த , சப்-இன்ஸ்பெக்டர் இஸ்திரிஸ்கான் மற்றும் போலீசார் ரோந்து சென்ற பொழுது காலேஜ் விலக்கு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நபர்களைப் பிடித்து விசாரணை செய்தனர் பின்னர் அவர்களை சோதனையிட்டதில் அவர்களிடமிருந்து பிரவுன் கலர் பேப்பரில் சுற்றப்பட்ட சுமார் 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுஅவர்களை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று போதை பொருள் கடத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக