சென்னையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 69 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நல திட்ட உதவிகளை வழங்கிய தமிழக முதல்வர். மு. க. ஸ்டாலின்!!
ராணிப்பேட்டைமாவட்டம்,அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 69-வது நினைவு நாளையொட்டி, சென்னையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார்கள்.
இந்த நிகழ்வில், வாலாஜா, அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரியின் கூட்ட அரங்கில் காணொளிக் காட்சி வாயிலாக!
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்கள் பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை, வழங்கி வாழ்த்தினார்.
ஏழை - எளிய மக்களின் அரசியல் - பொருளாதார - சமூக உரிமைகளை உறுதி செய்யும் வகையில் திராவிட மாடல் அரசின் பணிகள் என்றென்றும் தொடரும் என அமைச்சர் ஆர் காந்தி அவர்கள் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.




கருத்துகள்
கருத்துரையிடுக