64 வது தேசிய மருந்தியல் வார விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை இலுப்பூர்,மதர் தெரசா மருந்தியல் கல்லூரியின் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி!!


புதுக்கோட்டை மாவட்டம்,  புதுக்கோட்டை ராஜாஸ் கல்லூரி முன்பாக  இந்த பேரணி தொடங்கி புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. பேரணியில் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உற்சாகமாக பங்கேற்று, மருந்தியல் துறையின் சமூகப் பொறுப்பு, மருந்துகளை சரியான முறையில் பயன்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்குள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியின் சிறப்பு விருந்தினராக் 16 வது வார்டு மாமன்ற உறுப்பினர், முன்னாள் நகர் மன்ற தலைவர் . S.A.S சேட்டு   கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார். 

மதர் தெரசா கல்வி குழுமத்தின் நிறுவனர் .இரா.சின்னதம்பி மற்றும்  தாளாளர். இரா. சி. உதயகுமார், பதிவாளர் பேராசிரியர். மு. தினேஷ்குமார் அவர்களின் தலைமையில் பேரணி சிறப்பாக நடைபெற்றது.

மதர் தெரசா மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர். டி. ஶ்ரீ விஜயகிருபா அவர்கள் சிறப்பு விருந்தினரை கௌரவித்து பேரணியை சிறப்பாக வழி நடத்தினார். 

காவல்துறை துணை ஆய்வாளர். ரமேஷ் ,மாவட்ட மாணவர் அணி செயலாளர்.ஜே. முகமது இப்ராகிம் ஹைபர் அலி, மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் .ஏ.  கர்ணன்,  வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர். கே.செந்தில்குமார், வர்த்தக அணி இணை செயலாளர்.கனகசபை மற்றும் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர். பழனிவேல் ஆகியோர் பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!