புவனகிரி தொகுதியில் 500-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர், பாராளுமன்ற உறுப்பினர். சி.வி சண்முகம் அவர்கள் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்!!
கடலூர் மாவட்டம், புவனகிரி தொகுதிக்குட்பட்ட, பெரியாகுறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அதிமுக மேற்கு மாவட்ட மருத்துவ அணி இணை செயலாளர் மருத்துவர். பிரியதர்ஷன் ஏற்பாட்டில், மாற்றுக் கட்சியிலிருந்து 500.க்கும் மேற்பட்டோர் விலகி, அதிமுக முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினரும் விழுப்புரம் மாவட்ட கழக செயலாளருமான சி.வி. சண்முகம் அவர்களும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர். அருண்மொழி தேவன் அவர்களின் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினருக்கு, கழக துண்டு அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
அப்போது பாராளுமன்ற உறுப்பினர். சி.வி. சண்முகம் அவர்கள் பேசுகையில்!..
திமுக கட்சி ஒரு குடும்ப கட்சி எனவும், திமுகவின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை எனவும், மக்கள் தெளிவாக முடிவெடுத்து விட்டார்கள் எனவும், அதிமுகவை நம்பி வந்தவர்களை எப்பொழுதும் கைவிட மாட்டார்கள், உழைப்பவர்களுக்கு அதிமுகவில் கண்டிப்பாக அங்கிகாரம் உண்டு என்று கூறினார்.
மேலும் செல்வாக்கு மிக்கவர்கள், பொறுப்பில் உள்ளவர்கள் மட்டும்தான், திமுகவில் முக்கிய பொறுப்பிற்கு வர முடியும் எனவும், ஸ்டாலின் குடும்பம், சோனியா காந்தி குடும்பம், அகிலேஷ் யாதவ் குடும்பம் என அனைத்தும் வாரிசு அரசியல் செய்வதாகவும், ஆனால் அதிமுகவில் அனைத்து தரப்பினரும் உச்ச பதவிக்கு வரலாம் என கூறினார்.
மேலும் திமுக காங்கிரஸ் கூட்டணி மத்தியில் 17 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்தும், நெய்வேலி என்எல்சி நிர்வாகம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனவும், துரும்பை கூட கிள்ளி போடாத திமுக, எதிர்க்கட்சியாக இருக்கும்போது வாய் கிழிய பேசுவதாகவும், ஆனால் ஆளுங்கட்சியாக இருந்தால் வாயை மூடி கொள்வதாகவும் குற்றம் சாட்டினார். ஆனால் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம், தனியாருக்கு தாரை வார்க்க இருந்த, ஐந்து சதவீத பங்குகளை வாங்கி தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு விளக்கேற்றியவர் என்று பெருமிதம் தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக