ஆற்காடு - தோப்பு கருப்பசாமி ஆலயத்தில் ஓம் ஶ்ரீ மகர ஜோதி பக்த சபா சார்பில் ஐயப்பன் சாமிக்கு 5- ஆம் ஆண்டு படி பூஜை!!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் செய்யாறு சாலையில் அமைந்துள்ள தோப்பு கருப்புசாமி ஆலயத்தில், ஓம் ஸ்ரீ மகர ஜோதி பக்த சபா சார்பில் ஐயப்பன் சாமிக்கு ஐந்தாம் ஆண்டு படி பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. மணிகண்டனன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு, குருசாமிகள் பிரபு மற்றும் மகேஷ்வர்மன் தலைமையேற்று வழிநடத்தினர்.
படி பூஜையில் ராணிப்பேட்டை மற்றும் காரை பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பங்கேற்று, தனிப்பட்ட முறையில் சாமி தரிசனம் செய்து கவனயாத்திரை மேற்கொண்டனர். அத்துடன், பக்தர்களின் உறவினர்கள் பலரும் திரளாக கலந்து கொண்டு நிகழ்வை ஆன்மிக நிறைவு பெற்றதாக்கினர்.
ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்
கருத்துகள்
கருத்துரையிடுக