ஈரோடு: சோலார் புதிய பேருந்து நிலையம் டிச. 4 முதல் முழுமையாகச் செயல்படுகிறது!!


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 26.11.2025 அன்று திறந்து வைக்கப்பட்ட ஈரோடு சோலார் புதிய பேருந்து நிலையம், 2025 டிசம்பர் 4ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11.00 மணி முதல் முழுமையாகச் செயல்பட உள்ளது.

இதன்படி, கரூர், மதுரை, வெள்ளகோவில் ஆகிய மார்க்கங்களில் செல்லும் அனைத்துப் புறநகர்ப் பேருந்துகளும் சோலார் புதிய பேருந்து நிலையத்திலிருந்தே இயக்கப்பட உள்ளன.மேலும், மதுரை, திருச்சி மற்றும் வெள்ளகோவிலில் இருந்து ஈரோடு வரும் பேருந்துகளும் சோலார் பேருந்து நிலையத்திற்கே வந்து சேரும்.

பொதுமக்களின் வசதிக்காக, சோலார் பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடு மத்திய பேருந்து நிலையம் மற்றும் நகரப் பகுதிகளுக்குச் செல்லப் போதுமான நகரப் பேருந்து வசதி செய்து தரப்பட்டுள்ளது. அத்துடன், ஆட்டோ மற்றும் டாக்ஸி சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

தென்மண்டல செய்தியாளர் சின்னதம்பி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!