முப்பதுவெட்டி ஊராட்சி அரசு நடுநிலை பள்ளியில் 35 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் கட்டிடம் திறப்பு!!


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே முப்பதுவெட்டி ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசினர் நடுநிலைப்பள்ளியில், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.35,10,000 செலவில் இரண்டு புதிய வகுப்பறைகள் கொண்ட பள்ளிக் கட்டிடம் புதிதாக கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி இன்று திறந்து வைத்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார்.


இந்நிகழ்வில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே. எல். ஈஸ்வரப்பன், ஆற்காடு கிழக்கு ஒன்றிய செயலாளர் பாண்டுரங்கன், ஒன்றிய குழு பெருந்தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், மாவட்ட ஒன்றிய குழு துணைத் தலைவர் ஸ்ரீமதி நந்தகுமார் உள்ளிட்ட கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் திரளாகக் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

ஆற்காடு செய்தியாளர் ஆனந்த் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!