திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக வடக்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு 300-க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் பங்கேற்ற பெ. வடிவேலு!!
திருவண்ணாமலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வடக்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக கழக இளைஞரணி செயலாளருமான. உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த இளைஞர் அணி மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் வடக்கு மண்டலத்தில் உள்ள 29 கழக மாவட்டங்கள், 91 சட்டமன்ற தொகுதிகளில் சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் இளைஞர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி அவர்களின் அறிவுறுத்தலின்படி, இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட, நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் பெ.வடிவேலு அவர்கள் தலைமையில் நெமிலி கிழக்கு ஒன்றியத்திலிருந்து, கிளை இளைஞரணி நிர்வாகிகள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்
கருத்துரையிடுக